2025 மே 21, புதன்கிழமை

நயனிடம் சிம்புவின் இறுதி வேண்டுகோள்...

Menaka Mookandi   / 2011 ஜூலை 11 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திரையுலகைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்ட நடிகை நயன்தாராவிடம் அவரது முன்னாள் காதலன் சிம்பு கடைசியாக ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். 'எல்லாம் முடிஞ்சி போச்சு' என சிம்புவின் வாய்தான் சொல்கிறதே தவிர, எப்படியாவது நயனுடன் மீண்டும் பேசிப் பழக வாய்ப்பைத் தேடுகிறதாம் சிம்புவி மனம்.

நடிகை நயன்தாரா, வெகு விரைவில் பிரபுதேவாவின் மனைவியாகப் போகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயமே. நடிகர் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்யப் போகிறார் என்று உறுதியான பிறகும், சரவணாவில் அவரை ஜோடியாக்கி டூயட் பாடியதைப் போல, நயன்தாராவையும் கடைசியாக தனது ஒஸ்தி படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு நடிக்குமாறு வேண்டி விரும்பி அழைத்தாராம் சிம்பு.

அவரது இந்த ஆசையை எந்த விலை கொடுத்தும் நிறைவேற்ற தயாராக நின்றாராம் இயக்குநர் தரணி. இருப்பினும் அந்த ஆசை நிராசையாகிவிட்டதாம். 'எனது கடைசிப் படம் 'ஸ்ரீ ராமராஜ்யம்' ஆகத்தான் இருக்க வேண்டும் அதில் நான் சீதை வேடித்தில் நடித்துள்ளேன். அந்த புனிதமான கதாபாத்திரத்தோடு சினிமாவை விட்டு விடைபெற விரும்புகிறேன்.

இந்நிலையில், கண்டபடி குத்தாட்டம் போட என்னைக் கூப்பிடாதீர்கள்' என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. ஆனால் நயன்தாராவின் இந்த முடிவு குறித்து சற்றும் மனம் தளராத சிலம்பரசன், அந்த வாய்ப்பினை நடிகை ஸ்ரேயாவுக்கு வழங்கியுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0

  • nanpan Tuesday, 12 July 2011 06:00 AM

    சினிமாவில் இது சகஜமப்பா சிம்பூ, நீ அவக்கு லாயக்கு இல்ல, வேறு யாரையும் பாருப்பா.

    Reply : 0       0

    alga Tuesday, 12 July 2011 06:35 PM

    நண்பேண்டா!!!!

    Reply : 0       0

    riyas Tuesday, 12 July 2011 08:22 PM

    கர்ப்பாம் மானமாம் கண்ணகியாம் நிற்குதடா ஐயோ பாவம், காசி இருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்.

    Reply : 0       0

    naren Wednesday, 20 July 2011 03:22 AM

    டியர் சிம்பு கடலில ஒரு மீனா இருக்கு?

    Reply : 0       0

    saieth Tuesday, 09 August 2011 08:39 AM

    நமக்கெல்லாம் ஆயரம் பிகர் மடியும் மச்சி

    Reply : 0       0

    nowshed Wednesday, 10 August 2011 08:32 PM

    எதுக்கு சிம்பு நீ பீல் பண்றாய் பிரபுதேவாதான் பீல் பண்ணனும்.

    Reply : 0       0

    bala Wednesday, 17 August 2011 04:20 AM

    சிம்புக்கு ரொம்பதான் பேராசை

    Reply : 0       0

    afeel Monday, 13 August 2012 08:39 PM

    உனக்கு ஆயிரம் பேர் இருக்க எதுக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X