2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காஜலுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா...

Menaka Mookandi   / 2011 ஜூலை 23 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்பாத்தி அகோரம் வழங்கும் ஏஜிஎஸ் மூவீஸினால் தயாரிக்கப்படும் திரைப்படம் 'மாற்றான்'. இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை இன்று நடிகை காஜல் அகர்வாலுடன் கொண்டாடியுள்ளார் சூர்யா. இதில் மாற்றான் படக் குழுவினர்களுடம் கலந்துகொண்டுள்ளர்.

மாற்றான் படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை ஆன்டனி கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாற்றான் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிற நிலையிலேயே இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா...


You May Also Like

  Comments - 0

  • saji Friday, 29 July 2011 10:43 PM

    ஹ ஹ ஹ நல்ல முடிவு

    Reply : 0       0

    aathilahamed Tuesday, 09 August 2011 03:36 PM

    சார் நீங்க அப்போதும் சூப்பர் ஹிட் நாங்கள் அப்போதும் உங்களுடன் உங்களுடன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X