2025 மே 21, புதன்கிழமை

இந்துவாக மாறினார் நயன்தாரா...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காதலித்த பெண்ணையோ அல்லது ஆணையோ கரம் பிடிப்பதற்காக பலரும் பலவற்றை விட்டுக்கொடுத்து தங்களது காதலில் வெற்றி பெறுவதைப் பார்த்திருக்கிறோம், கேட்டறிந்திருக்கிறோம். சினிமாவுக்காக மாத்திரமின்ற நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறு கரம்பிடிக்கவுள்ள தமிழ்த் திரையுலக ஜோடியைப் பற்றி நாம் புதிதாக எதுவும் சொல்வதற்கில்லை. ஆம், நாம் இங்கே சொல்லப்போவது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநரும் நடன ஆசிரியரும் நடிகருமான பிரபு தேவா ஜோடியைப் பற்றித்தான்.

இருப்பினும் இந்த பிரபல ஜோடி, தங்களது காதல் கைகூடுவதற்காக அப்படி எதைத்தான் விட்டுக்கொடுத்தார்கள் என்று விபரமாகப் பார்த்தேயாக வேண்டும். 'தன்னைக் காதலித்ததற்காக தனது மனைவியையே விவாகரத்து செய்தவர் பிரபுதேவா, அவருக்காக என்னாள் விட்டுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் அவருக்காக எனது மதத்தை விட்டுக்கொடுக்கப் போகிறேன்' என்று கிளம்பிவிட்டார் நயன்தாரா.

டயானா மரியம் குரியன் என்பது நயன்தாராவின் இயற்பெயர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். திரையுலகுக்காக தனது பெயரை நயன்தாரா என்று வைத்துக்கொண்டு அறிமுகமானார். இதேவேளை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில் ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை குடும்பநல நீதிமன்றம் அறிவித்தது.

இப்போது பிரபு தேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாராதான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபு தேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தீர்க்கமானதொரு முடிவினை எடுத்துள்ளார் நயன்தாரா.

தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா. நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். கொச்சியிலிருந்து சென்னை சென்ற நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் 'சுத்த பரிகாரம்' செய்தார். பின்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் கூறியுள்ளார். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.


You May Also Like

  Comments - 0

  • asker Tuesday, 09 August 2011 04:44 PM

    காதலுக்காக மதம் மாறுவதைவிட மார்க்கத்தை பற்றி தெரிந்து மதம் மாறினால் வெற்றி கிடைக்கும்,அல்லது ரம்லதுக்கு நடந்ததே நடக்கும்.

    Reply : 0       0

    Riyas Tuesday, 09 August 2011 08:41 PM

    பிரவு தேவா ஒரு வண்டு. அடுத்த பூ எதுவோ????

    Reply : 0       0

    xlntgson Tuesday, 09 August 2011 09:04 PM

    மத மாற்றங்கள் பித்தலாட்டங்கள்! பெண்கள் திருமணத்தின் பின் கணவரைப் பின்பற்றிப் போக வேண்டியதால் மன்னிக்கலாம்! சினிமா மோகம் ஆத்மாவுக்கு குணமில்லை, அறிந்து கொள்!

    Reply : 0       0

    Kamaaldeen Tuesday, 09 August 2011 09:51 PM

    ஒரு தாலியை பறித்து விட்டு அந்த நெருப்பில் குளிர் காய்வதா?

    Reply : 0       0

    hafeez Tuesday, 09 August 2011 11:44 PM

    eththanai varudankalukko enru paarpom. pillai perum varaikkum irunthal pothum

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 10 August 2011 04:02 AM

    இவர் இந்துவாக மாறியதால் இந்து சமயத்துக்கு ஒரு நாளும் கிடைக்காத ஒரு உயர்வு கிடைத்துவிட்டதோ. பெரியதோர் துரோகத்திற்கு துணைபோன. இவர்கள் மதம்மாறி சமயத்திற்கு மேலும் பழிதேடி தருவார்கள்.

    Reply : 0       0

    Ibnu Saleem Wednesday, 10 August 2011 04:28 AM

    பொதுவாக நடிகர் குழாமுக்கு இது புதிதானதல்ல, ஆயினும் குப்பையை கோபுரத்தில் வைக்கமுடியாது என்றோ ஓரு நாள் குப்பை சாக்கடைக்கே
    செல்லும்.(குப்பை=நய+பிர, கோபுரம்-ரம்லத்)

    Reply : 0       0

    fath Wednesday, 10 August 2011 03:01 PM

    நடிகர்கள் பாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிப்பவர்கள் . இவர்கள்தான் உண்மையான நடிகர்கள் வாழ்க !. மாறுக !

    Reply : 0       0

    asker Wednesday, 10 August 2011 05:39 PM

    சலீம் ,ரம்லதும் ஒரு குப்ப தான்

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 11 August 2011 03:30 AM

    சொல்ல மறந்த செய்தி இது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். முதலில் முஸ்லிம் பெண் ,இப்போ கிறிஸ்துவ பெண் அடுத்து பௌத்தமா? பிரபுதேவாவுக்கு தன் சொந்த மத பெண்கள் மீது ஆசையில்லையா அல்லது பெண்கொடுக்க மறுக்கிறார்களா. இந்துப்பெண்கள் அதிஸ்டசாலிகள்.

    Reply : 0       0

    jabeer Thursday, 11 August 2011 04:11 PM

    இவர்கள் எந்த மார்க்கத்தில் இருந்தாலும் யாருக்கும் லாபம் இல்லை.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 12 August 2011 09:29 PM

    பிரபு தேவா முஸ்லீம் பெண்ணை மாற்றி திருமணம் முடித்து அவளிடம் இருந்த ஆசை முடிந்ததும் இப்போது கிறிஸ்தவ பெண் நயந்தாராவை மதம் மாற்றி திருமணம் முடிக்கிறார். நயந்தாராவின் மீதுள்ள மோகம் முடிந்ததும் அடுத்து ஒரு கேடு கெட்டது கிடைக்கும். இது சொல்லவா வேண்டும்? சினிமா இப்போ சிரிமா? தெரியாத விடையமா? நடிகர்கள் சொந்த வாழ்க்கையையும் நடிப்புக்குள் கொண்டுவருவது கண்டனத்துக்கு உரியது.

    Reply : 0       0

    ashvin Wednesday, 17 August 2011 05:39 AM

    பணத்திற்காகவும் காமத்திற்காகவும் எத எதையோ விட்டு கொடுகுறவங்க இவங்க. கல்யாணமெல்லாம் இம்மாதிரியானோருக்கு சட்டபடி விபச்சாரம் பண்ணுறது மாதிரி.

    Reply : 0       0

    aman Wednesday, 17 August 2011 06:42 AM

    பிரபுதேவா செய்துள்ள வேலையே ஒரு முஸ்லிம் செய்திருந்தால் ??????????

    Reply : 0       0

    JALTHI Saturday, 27 August 2011 08:57 PM

    இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X