Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயம் எம்.ராஜா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் வேலாயுதம். இதில் நடிகைகளான ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இந்திய ரூபாப்படி 45 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பார்ப்பை தோற்றுவித்துள்ள வேலாயுதம் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. இசை இருவட்டினை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
அ.தி.மு.க.வுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தத் திரைப்படத்தின் இசை இருவட்டினை, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வேலாயுதம் திரைப்படத்தின் பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம். இப்போது படத்தின் இசை இருவட்டினை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
sri Thursday, 18 August 2011 04:36 PM
பாடல் வெளியீடு நன்றாக நடை பெற வாழ்த்துகள் தளபதி அன்ன.
Reply : 0 0
Sajanraj Monday, 22 August 2011 12:32 AM
இந்த படமாவது ஹிட் ஆகுமா????
Reply : 0 0
zuve Tuesday, 23 August 2011 04:54 PM
தளபதி படம் அன்ர சூப்பர் கிட தானே .
Reply : 0 0
siya kutty Sunday, 28 August 2011 11:14 PM
இளைய தளபதி படம்னா சொல்லவா வேணும். விஜய்யுடைய சினிமா வரலாற்றிலேயே அதிகம் வசூல் செய்யக் கூடிய படம் கூட இதுவாகத்தான் இருக்கும் கலக்குங்கண்ணா. இளைய தளபதி வாழ்க.
Reply : 0 0
mani Saturday, 03 September 2011 08:10 PM
இது மங்காத்தாவையும் தாண்டி சாதனை படைக்கும் தளபதி படம். வாழ்துகள்
Reply : 0 0
SGS Sunday, 04 September 2011 05:57 AM
வந்த பிறகு பாப்பமே.....................
Reply : 0 0
vasu Sunday, 18 September 2011 06:04 AM
thampi SGS atha padam vara poguthunu theriyuthula apparam enna pappa.
Reply : 0 0
kalaiyarasi Thursday, 29 September 2011 07:53 PM
hai vijay i like you , i love you
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago