Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாஜியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சுற்றிவந்தவர் ஸ்ரேயா. தற்போது ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'ரௌத்திரம' திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரேயா, தான் இப்போது நடிகர் விக்கிரமை காதலிக்கத் தொடங்கிவிட்டதாக பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஆம், சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனதாகக் கூறியுள்ள ஸ்ரேயா, அந்த திரைப்படத்தின் கிருஷ்ணா கதாபாத்திரம் விக்ரமை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டதாகவும் தெய்வத் திருமகள் படத்தைப் பார்த்த பின்னர் விக்கிரமை காதிலிக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் ஜோடியாக நடித்த இரண்டு கதாநாயகர்களான விக்ரம் மற்றும் விஷாலின் திரைப்படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.
விக்ரமுடன் கந்தசாமியிலும் விஷாலுடன் தோரணை திரைப்படத்திலும் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா, அண்மையில் அவர் பார்த்து ரசித்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்து பேசிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது விக்ரமை புகழ்ந்த ஸ்ரேயா, தான் பிரமித்த இன்னொரு கதாநாயகர் விஷால் எனவும் அவர் நடித்த அவன் இவன் படம் தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தன்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படத்தையும் தான் பார்தததாகவும் அது மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் ஜீவா அதில் சிறப்பாக நடித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.
ALIYAR HAMZA Wednesday, 17 August 2011 08:11 PM
Rombe alehana jody porutham mudimanaal rai....
Reply : 0 0
JER@D Thursday, 18 August 2011 05:37 PM
செல்லம் உங்களை எனக்கு ரொம்ப ரெம்ப நல்லா பிடிக்கும், நீங்க நடிச்ச ரௌத்திரம் படம் சூப்பர், ஐ லவ் யு மை டியர்.
Reply : 0 0
மீனா Thursday, 18 August 2011 08:07 PM
நயன்தாரா செய்தது மாதிரி நீங்களும் இன்னொரு பெண்ணின் வாழ்கையில் அநியாயமாக விளையாடி விட வேண்டாம்.
Reply : 0 0
nisardeen sameer Sunday, 21 August 2011 01:47 AM
நீங்க காதலிச்சா மட்டும் பத்தாதே. நீங்க இவ்வளவு வெளிப்படைய சொல்லுற ஒரு கேர்ள் என்று தெரிஞ்சா. சீ போன்னு தொரத்திருவாரு. .பாத்து இருங்க.
Reply : 0 0
niros Sunday, 23 October 2011 12:49 PM
பெண் பாவம் பொல்லாதது, மீனா சொன்னது போல
ஒரு நல்ல குடும்பத்த அழிச்சிடாதீங்க ஸ்ரேயா.
வேற ஆம்பிளையே கிடக்கைல்லையா ........காதலிக்கவும் கும்மாளம் அடிக்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago