Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் அனுஷ்கா. அவரது நடிப்புத் திறமையில் அனைத்து இயக்குனர்களும் மயங்கிப் போயுள்ளமை திரையுலக வட்டாரங்களில் பேசப்படும் விடயமே.
அனுஷ்காவின் நடிப்பில் புதிதாக மயங்கியுள்ளவர் யார் என்று பார்க்கின்றீர்களா? ஆம் எமது உலக நாயகன் கமல் தான் தற்போது அனுஷ்காவின் வீட்டைத் தட்டியுள்ள இயக்குனர்.
கமல்ஹாஸனின் இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்க புதிதாகத் தயாரிக்கப்பட்டுவரும் திரைப்படம் விஸ்வரூபம். இருப்பினும், விஸ்வரூபம் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பது இழுபறியாகவே இருந்தது. இவ்வாறு நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அந்த வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் அனுஷ்கா என கமல் தற்போது முடிவெடுத்துள்ளாராம்.
இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென படத்திலிருந்து விலகிக்கொண்டார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தாமதமாகவே ஆரம்பிக்க இருப்பதால் இந்தி வாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி அவர் விலகிக் கொண்டார்.
எனவே தீபிகா படுகோன் உட்பட பலரிடமும் விஸ்வரூபத்தின் நாயகியாக நடிக்க பேசி வந்தனர். இருப்பினும் அந்த முயற்சி பயனளிக்காத நிலையில் தற்போது அனுஷ்காவை அனுகி அவரையே நாயகியாக்கியுள்ளனராம் கமல் குழுவினர்.
Citizen Wednesday, 24 August 2011 10:06 PM
கமலிடம் இருந்து மிஞ்சினால் சரி! (நடிப்பில்)
Reply : 0 0
wellwisher Thursday, 25 August 2011 03:15 AM
சக்கை மட்டும் தான் மிஞ்சும்.
Reply : 0 0
jaseyilli Thursday, 25 August 2011 04:11 AM
அத இத காட்டி உணர்ச்சிய கூட்டுங்க.
Reply : 0 0
imru Thursday, 25 August 2011 10:16 PM
சுட்டா தல எனக்கு
Reply : 0 0
m j i l. Saturday, 27 August 2011 09:01 PM
ஏன் தலை உங்களுக்கு நல்லா பிடிக்குமாக்கும்.....
Reply : 0 0
ajan Sunday, 28 August 2011 09:42 PM
ஏன் கமல் மட்டும் தானா நடிகர்? இந்த உலகத்துலே எல்லோருமே நடிகர்தான்.
Reply : 0 0
suren Monday, 29 August 2011 06:04 PM
உங்கள் நடிப்பு THE பெஸ்ட்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago