Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இந்தி நடிகர் சல்மன்கான், தனது சிகிச்சையை முன்னிட்டு அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாகவே சிகிச்சை நிமித்தம் அவர் இவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
நடிகர் சல்மன்கானுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருவதாக அவர் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் அவர் முடிவு செய்துள்ளார்.
தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே மும்பையில் சிகிச்சையளித்த வைத்தியர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago