Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாத் துறையில் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பல்வேறு போராட்டங்களின் பின்னர் நடிகர் அமிதாப் பச்சனின் புதல்வரும் நடிகருமான அபிசேக் பச்சனை கரம் பிடித்தார். இந்நிலையில் அவர் 6 மாத கர்ப்பவதியாக உள்ளார்.
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், தனது கர்ப்ப காலங்களிலும் சிற்சில விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் பணத்தாசை பிடித்தவர் என பொலிவூட் மக்கள் அவர் மீது கிசுகிசுக்கத் தெளிக்கத் தொடங்கியுள்ளனர்.
எப்படியோ இந்த செய்தி ஐஸ்வர்யாவின் காதுகளுக்கு எட்டவே கடுப்பாகியுள்ளாராம் அவர். கர்ப்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்தால் பணத்தாசை பிடித்தவள் எனக் கூறுவதா? என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கடுப்பாகியுள்ளார்.
'கர்ப்பம் என்பது நோயல்ல. சினிமாவில் நடிக்க ஆரோக்கியமாக இருந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், அதனால் நடிக்கிறேன். கர்ப்பமாக இருக்கும் போது நடிக்கக் கூடாதா என்ன? அதற்காகப் போய் என்னை பணத்தாசை பிடித்தவள் என்று சொல்கிறார்களே' என்று ஆவேசப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா.
தான் கர்ப்பமானதால் மதுர் பந்தர்கரின் 'ஹீரோயின்' என்ற படத்தில் இருந்து விலகிக்கொண்டார் ஐஸ்வர்யா. படங்களில் தான் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களிலாவது நடிக்கலாமே என்று நினைத்தே நடித்து வருகிறார்.
அண்மையில் லக்ஸ் விளம்பரப் படத்திற்காக லண்டன் சென்று வந்தார். இதைப் பார்த்தே அவர் மீது கிசுகிசுக்களை கொட்டித் தீர்த்துள்ளனராம் பொலிவூட் மக்கள்.
HUMAN Tuesday, 30 August 2011 03:13 AM
கர்ப்ப காலத்தில் ஆத்திரபடக்கூடாது பாப்பா.
Reply : 0 0
Salamdeen Wednesday, 31 August 2011 03:25 AM
கர்ப்ப காலத்தில் நடித்தால் என்ன பணம் வந்தால் போதும் தானே.
Reply : 0 0
Wijay Monday, 12 September 2011 09:41 PM
ஹீ ஹீ ஹீ.. நீங்கள் இதற்கெல்லாம் ஆவேசப்படக்கூடது பேபி. சினிமாவில் நீங்கள் கேட்காத கிசு கிசு வா? என்னமோ இதுதான் வாழ்க்கையிலே முதல் முறையாக கேட்கும் கிசு கிசு போல சீறுகிறீர்களே. இதை எல்லாம் பார்த்தல் நீங்கள் சினிமாவுக்கு வந்தே இருக்க கூடாது..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago