Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு திரைப்படத்திலாவது அவருக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசைப்படுகிறேன். அன்று தான் என்னுடைய சினிமாப் பயணம் பூர்த்தியடையும் என்று தெரிவித்துள்ளார் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய ஊடகமொன்றுக்கு நடிகர் அஜீத் வழங்கியுள்ள பேட்டியொன்றில், அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 'உங்கள் அடுத்த ஆசை என்ன என்று அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
'எனக்கு நம்பர் வன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்' என்று கூறி பெருமைப்பட்டுள்ளார் அஜீத்.
reema Friday, 16 September 2011 10:00 AM
என்ன கொடும சார்.
Reply : 0 0
zamroodh Sunday, 18 September 2011 10:22 PM
முடியல்ல!!!! ப்ப்ப்பப்
Reply : 0 0
Fan page Friday, 07 October 2011 05:56 AM
பேராசை பெரு நட்டம் .
மங்காத்தா தோல்வியே theriyalaiya.
Reply : 0 0
niros Sunday, 23 October 2011 12:40 PM
தலையுடைய எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago