2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அஜீத்தின் அடுத்த இயக்குனர் யார்?...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாபெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து அனைவரிடமும் கைதட்டல் வாங்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் தல அஜித் நடித்த மங்காத்தா. மெக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இந்நிலையில், மாபெரும் வெற்றிக்களிப்பில் உள்ள அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்த இயக்குனர் போட்டியில் முக்கிய இடங்களைப் பிடித்தவர்கள் இருவர் என்றே கூற வேண்டும். அவர்களில் ஒருவர் ஜெயம் புகழ் ராஜா, மற்றையவர் என்றும் பிரமாண்டமான திரைப்படங்களை இயக்கிவரும் ஷங்கர்.  ஜெயம் ராஜாவைப் பொறுத்தவரையில், நடிகர் அஜீத் இவருடன் சில கதைகளை விவாதித்துள்ளார் என்று தெரியவருகிறது. மகேஷ்பாபு நடிப்பில் வெகுவிரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'தூக்குடு'.

இந்தப் படத்தை ரீமேக் செய்ய திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ராஜாவுக்கும் அஜீத்துக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சு நடந்ததாகக் கூறப்படுகிறது.  இதேவேளை, ஷங்கரின் இயக்கத்தில் தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்ததும் நடிகர் அஜீத்தை வைத்து அவர் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

காரணம் ஏற்கெனவே ஏ.எம்.ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏ.எம்.ரத்னத்துக்காக ஏற்கெனவே இந்தியன், போய்ஸ் போன்ற படங்களை  ஷங்கர் இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • kajan Sunday, 09 October 2011 01:57 PM

    மாபெரும் எதிர்ர்பார்ப்புன்னு பொய்தானே சொல்லுறியள் படமே இல்லாத டைம் வேலியலவிட்டுடு. ....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .