Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எனக்கும் பிரபுதேவாவுக்கும் இடையில் சண்டை எதுவுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம்' என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணிநேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அது தீயாகப் பற்றிக் கொண்டது.
முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து, நயன் - பிரபுதேவா சண்டை உண்மைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இன்று இந்த செய்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை நயன்தாரா. இது தொடர்பில் அவர் கூறுகையில், 'எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பதே உண்மை. திருமணத் திகதியை விரைவில் அறிவிப்போம்' என்றார். இதேவேளை, பிரபு தேவா - நயன்தாரா திருமணத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் நடப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
mohmed fowzoon Monday, 17 October 2011 06:55 PM
இப்போ கள்ள காதல கூட நல்ல காதல் எண்டு சொல்றாங்கப்பா. என்ன கொடும! ஐயோ ஐயோ!!
Reply : 0 0
asker Monday, 17 October 2011 08:43 PM
விரைவில் உங்களுக்கும் விவாகரத்து கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள். ரம்லத்துக்கு கிடைத்த துன்பம் இவருக்கும் உண்டாகட்டும்.
Reply : 0 0
Reader Monday, 17 October 2011 09:02 PM
வேஸ்ட் நியூஸ்.
Reply : 0 0
Mathy Monday, 17 October 2011 09:16 PM
oodalukku pin kudal.
Reply : 0 0
muosa Tuesday, 18 October 2011 12:26 AM
ரம்லத்தினதும் பிள்ளைகளினதும் சாபம் கட்டாயம் கிடைக்கும்.
Reply : 0 0
maazeen Tuesday, 18 October 2011 04:21 PM
சாபம் வந்து சேரும்.
Reply : 0 0
rifay Tuesday, 18 October 2011 08:18 PM
விரைவில் நடக்கட்டும்..
Reply : 0 0
fathi Tuesday, 18 October 2011 11:25 PM
நடப்பதை பொறுத்திருந்து பார்ப்பம்.
Reply : 0 0
AJMAL FROM THMABALA Friday, 21 October 2011 08:50 PM
என்னப்பா வேற நியூஸ் கிடைக்கலையா உங்களுக்கு?
Reply : 0 0
najath Saturday, 22 October 2011 02:38 AM
இவர்களின் காதல் தொடர எனது மனமாந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
msfasly Monday, 24 October 2011 12:51 AM
நயன்தாரா மீது கொண்ட காதலால் அல்ல காமத்தாலே ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிறப்பு. என்ன வாழ்க்கை இது ஒரு குடும்பத்தை பிரித்து குழந்தைகளை அநாதைகளாக்கிய நயன்தாரா போன்றோர் உருப்பட மாட்டார்கள்.
Reply : 0 0
niros Monday, 24 October 2011 04:19 AM
அவரு உங்கள பிரிஞ்சிடாம பார்த்துக்குங்கோ..........
உங்கட காதல் சின்னாபின்னமாகி போக முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
Reply : 0 0
KIYAS Thursday, 27 October 2011 11:44 PM
உண்மையான காதல் இருந்தால் அது கட்டாயம் நிறைவேறும்.
Reply : 0 0
muniyandi Monday, 31 October 2011 03:05 PM
சீக்கிரமாகவே விவாகரத்து பெற வாழ்த்துகிறோம். !!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago