2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சினேகா - பிரசன்னா டும் டும் டும்...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறப்போவதாக நடிகர் பிரசன்னா இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

'விரும்புகிறேன்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா. இவர்கள் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
 
இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  இருப்பினும் இதுகுறித்து இரு தரப்பிலிருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 'இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்'' என்றும் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Ziyadh Friday, 25 November 2011 04:03 PM

    நல்ல ஜோடி, பொருத்தமா தான் இருக்கு. வாழ்த்துக்கள். பல ஆண்டுகள் வாழ்க.

    Reply : 0       0

    fazlulhaq Tuesday, 27 December 2011 03:29 AM

    சூப்பர் ஜோடி

    Reply : 0       0

    mujeeba Monday, 23 January 2012 09:25 PM

    நல்ல சூப்பர் jodi

    Reply : 0       0

    A.C.A.Najeem Thursday, 02 February 2012 10:59 PM

    நல்ல முடிவு நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X