Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 25 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷ் பாடிய 'வை திஸ் கொலவெறி டீ' பாடலை யூ ரியூப் இணையத்தளத்தில் ஒரு வாரத்திற்குள் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர்.
நேற்று 3,020,014 பேர் இந்த வீடியோவை பார்த்திருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை பகல் இந்த எண்ணிக்கை 4,052,189 ஆக உயர்ந்தது.
அத்துடன் ட்விட்டர் இணையத்தளத்தில் கடந்த மூன்று நாட்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாகவும் இந்த 'கொலவெறி' அமைந்துள்ளது.
நடிகராகவே அறியப்பட்ட தனுஷ் பாடிய இப்பாடலின் வெற்றி பலரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.
தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் உருவான '3' எனும் திரைப்படத்திற்காக தனுஷ் இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.
"இப்பாடலை எழுதும்போதும் பதிவுசெய்யும்போது நாம் உண்மையில் குதூகலத்தை அனுபவித்தோம்" என தனுஷ் கூறியுள்ளார்.
இப்பாடல் உட்பட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் 21 வயதான அனுருத் ரவிச்சந்தர் எனும் இளைஞராவார். இவரின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
asm irshad Saturday, 26 November 2011 07:20 AM
பாடுவது மிகவும் கடினம். தனுஷ் மிகவும் நன்றாக பாடி பாடிக் காட்டவும் முடியும் என்பதை நிருபித்துள்ளார்.
Reply : 0 0
mlm anzar Saturday, 26 November 2011 03:00 PM
நல்லது எனது வாழ்துக்கள்
Reply : 0 0
ala Sunday, 27 November 2011 04:04 AM
நிஜமாவே இது ஒரு கொலை வெறியான பாடல். குரலும் சரி இல்லை, பாடல் வரிகளும் விளங்கவில்லை. டிவிற்றரிலும் பேஷ் புக்கிலும் அதிகமாக பேசப்பட்டது என்னவோ நிஜம் தான். அதுலயும் பாடலை, தனுஷுக்கு மக்கள் மேல் ஏன் இந்த கொலை வெறி என்று பேசியவர்கள் தான் அதிகம்.
Reply : 0 0
nilujan Sunday, 27 November 2011 04:09 AM
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு. அது மட்டும் இல்லாம இந்த பாட்டை என் எல்லா நண்பர்களுக்கும் போட்டு காட்டுவேன் .
Reply : 0 0
ZAIN NASEEM Sunday, 27 November 2011 04:19 PM
பழைய பஞ்சாங்கங்களுக்கு புதிய பாடல்கள் புரியாத புதிராகவே இருப்பது சகஜம்.
Reply : 0 0
mohammed Monday, 28 November 2011 03:07 PM
ஒ சர்வேதச சமுகமே, இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதை தடுக்க, நீங்கள் ஆங்கில தடை விதிக்க வழி இல்லையா.
Reply : 0 0
razan Tuesday, 29 November 2011 09:57 PM
உங்கள் தனுசுக்கு வேறவேலை இல்லையா ??? கொலை வெறி பிடித்து அலைகிறாரு...........
Reply : 0 0
GM Friday, 02 December 2011 08:51 PM
என்ன கொடும சேர் ..... !!!!
Reply : 0 0
GM Friday, 02 December 2011 08:55 PM
இது ... Simbukku poddi .....
Reply : 0 0
pathman Thursday, 08 December 2011 03:07 AM
வயது, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து உள்ளங்களையும் எளிதில் கொள்ளை கொண்ட பாடல். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
- பத்மன்
Reply : 0 0
pathman Thursday, 08 December 2011 03:07 AM
வயது, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து உள்ளங்களையும் எளிதில் கொள்ளை கொண்ட பாடல். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சுதன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago