Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு திரையுலகில் அண்மையில் வெளியான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் சீதையாக நடித்த நயன்தாரா, ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய திரைப்படமொன்றில் மண்டோதரி (இராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படமொன்றை தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்தத் திரைப்படத்தை அவரே இயக்கவுமுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வரும் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் ராம்கோபால் வர்மா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ ராம ராஜ்ஜியத்தில் சீதையாக நடித்த நயன்தாரா, மீண்டும் புராண திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், அண்மையில், அவருக்கு தெலுங்கில் வந்த பெரிய திரை வாய்ப்பை மறுத்துவிட்டார்.
எனவே ராம் கோபால் வர்மாவின் இந்த வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் ஆண்டில் நயன்தாரா - பிரபுதேவா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
galba Friday, 30 December 2011 05:07 PM
என்ன வேஷம் என்றாலும் கூத்தாடிகள் போடுவார்கள் !!! அது ராமர் என்றாலும் சரி ... ராவணன் என்றாலும் சரி வித்தியாசம் இல்லை !!!
Reply : 0 0
kolifathaanaa Thursday, 05 January 2012 04:41 PM
வேஷக்காரி.
Reply : 0 0
Logeswary Ganesan Tuesday, 10 January 2012 08:45 AM
அழகான படங்கள் . கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நயன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago