2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்ருதி வைத்தியசாலையில்...

Menaka Mookandi   / 2014 ஜனவரி 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார் ஸ்ருதி ஹாசன். அண்மையில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீட்டுக்குள் மர்ம மனிதர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஸ்ருதி ஹாசனை தாக்கினார். பின்னர் அவரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்தனர்.

ஸ்ருதி ஹாசன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'ஏவடு' விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தின் புரோமோசன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார் ஸ்ருதி ஹாசன். தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X