2025 மே 19, திங்கட்கிழமை

முன்னாள் எம்.பி. மிலன் பிணையில் விடுதலை

S.Renuka   / 2025 மே 19 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மௌபிம ஜனதா கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, ரூ. 1 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு பிரதேச சபை எல்லைக்குள் ஒரு நிலத்தை விற்பனை செய்யும் போது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 373,000 இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X