2025 மே 19, திங்கட்கிழமை

காதலில் தந்தையை மிஞ்சிய மகன்...!

Menaka Mookandi   / 2014 ஜனவரி 19 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


'காதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்' என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'என்னமோ ஏதோ'. நிகிஷா படேல், ரகுல் பிரீதிசிங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ரவி தியாகராஜன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. விழாவில், நடிகர் கார்த்திக் கலந்துகொண்டு பேசினார். அவர் அதன்போது பேசியதாவது, 'இன்றைய தினம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக பணியாற்றுகின்றனர்.

இப்போது உள்ள கதாநாயகிகளைப் பார்க்கும்போது, எனக்கு வெட்கமாக இருக்கிறது. என்னை விட, அவர்கள் உயரமாக இருக்கிறார்கள். காதல் காட்சிகளில் என்னை விட, என் மகன் சிறப்பாக நடிக்கிறார். இப்போதையை தமிழ் சினிமா அதிசயிக்கிற வகையில் பல சாதனைகளை செய்து வருகிறது. தமிழ் சினிமாவில், திறமையான இளைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

நானும் 33 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் உறவுகள். கொஞ்ச காலமாக நான் சினிமாவை விட்டு தொலைவில் இருக்கிறேன். நடக்கிற மாற்றங்கள் சந்தோஷத்தைத் தருகிறது. ஆறு அடி இரண்டு அங்குலம் உயரம் உள்ள என் குழந்தை கௌதமை உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன். அவரை ஆசீர்வதியுங்கள்' என்று கூறியுள்ளார் கார்த்திக்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X