2025 மே 19, திங்கட்கிழமை

நஸ்ரியாவுக்கு டும் டும் டும்...

Menaka Mookandi   / 2014 ஜனவரி 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் மலையாள நடிகருமான பஹத்தும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

'நஸ்ரியாவுக்கு அறிமுகம் தேவையில்லை...! நய்யாண்டி திரைப்படத்தில் நடித்தபோது தொப்புள் புரட்சி செய்ததின் மூலம் ரசிகர்களின் நினைவில் நிற்பவர். நய்யாண்டி, ராஜாராணி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்த நஸ்ரியா, திருமணம் எனும் நிக்காஹ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அத்திரைப்படம் விரைவில் வெளியாகிறது. தவிர மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக வாய் மூடி பேசவும் என்ற தமிழ் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். 2006ஆம் ஆண்டில் மலையாள திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, பிறகு கதாநாயகியானார்.

மலையாளத்தில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். தற்போது, நான்கு மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அசாத்தியமான அழகும், அதீதமான திறமையும் கொண்ட நஸ்ரியா, இன்னொரு நதியாவாக திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...

சற்றுமுன் கிடைத்த செய்தியில், மலையாள திரைப்பட உலகில் முன்னணி கதாநாயக நடிகரான ஃபஹத் பாசிலை திருமணம் செய்ய இருக்கிறார் நஸ்ரியா என்று திடீரென அறிவிக்கப்பட்டு விட்டது.

இயக்குநர் ஃபாசிலின் மகனான ஃபஹத் ஃபாசில், சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஆண்ட்ரியாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர். தற்போது மணிரத்னம் இயக்க உள்ள புதுத் திரைப்படத்தின் ஹீரோவும் இவர்தான். நஸ்ரியாவோ திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஜெய்யுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக நஸ்ரியாவும் ஃபஹத் ஃபாசிலும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் இருவரும் நீண்ட காலமாகவே காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், திருமணம் செய்து வைக்க முன் வந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருப்பதாக தகவல்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X