2025 மே 19, திங்கட்கிழமை

நயன் வேண்டாம்; ஹன்சிகா மட்டும் போதும்: சிம்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 21 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் மூலம் 04 முதன்முதலில் கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் சிம்பு. தன் வழியை பின்பற்றி இன்று உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான 'லவ் எந்தம்' என்ற அல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர் எகானை வைத்து எடுத்தும் முடித்து விட்டார் சிம்பு.

பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு திரைப்படத்தின் ஒரு பாடலில் அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு. தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். ஏற்கனவே 'எவன் டீ உன்ன பெத்தான் பெத்தான்' என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு. இப்பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளனராம் சிம்பு.

இதேவேளை, சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கிறார்கள் போன்று என்று பாண்டிராஜ் படப்பிடிப்பில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்களாம். வல்லவன் திரைப்படத்தில் நடித்தபோது சிம்புவும், நயன்தாராவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். சிம்புவை பிரிந்த நயன், பிரபுதேவாவை காதலித்தார். அவரையே திருமணம் செய்வதற்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். ஆனால் பிரபுதேவாவுடனான காதலும் முறிந்ததால் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்தார்.

மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவுக்கு மவுசு குறையவில்லை. மாறாக மவுசு அதிகரித்துள்ளது. இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். பாண்டிராஜ் சிம்புவை வைத்து எடுத்து வரும் படத்திற்கு ஒரு தேவதையை தேடி அலைந்து இறுதியில் நயன்தாராவை தேர்வு செய்தார். முன்னாள் காதலர் சிம்பவுடன் நடிக்க நயன்தாரா தயங்கியுள்ளார். ஆனால் பொலிவூட்டில் எல்லாம் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடிப்பதில்லையா என்று உதாரணங்கள் கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டனர்.

தயக்கத்தை விட்டுவிட்டு நயன்தாரா பல ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவை சந்தித்தார். பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு இருவரும் நடிக்கத் ஆரம்பித்தனர். பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவும், நயனும் சிரித்து சிரித்து பேசுகிறார்களாம். சிம்பு ஜோக் அடித்தால் நயன் விழுந்து விழுந்து சிரிக்கிறாராம். இதைப் பார்க்கும் படக்குழுவினர் அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக சிரித்துக் கொண்டே பேசிக்கொள்கிறார்களாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X