2025 மே 19, திங்கட்கிழமை

அப்பாவின் படத்தில் நடிக்க மாட்டேன்: ஸ்ருதி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


அப்பா கமல் ஹாஸனின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் தனது அப்பா கமல் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

காரணம் டேட்ஸ் இல்லையாம். அப்பா கேட்டும் டேட்ஸ் இல்லை என்று ஸ்ருதி சொல்கிறாரே ஒருவேளை அவர்களுக்குள் பிரச்சினையோ என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி விளக்கமளித்துள்ளார்.

வெல்கம் பேக் ஆகிய இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ரேஸ் குர்ரம் என்ற தெலுங்கு திரைப்படம் மற்றும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி.

ஒரு கேரவனில் இருந்து மற்றொன்றுக்கு ஓடுவது தான் தற்போது என் வாழ்க்கை. எனக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை தற்போது இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின்போது இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தது தான், அதற்கு பிறகு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது என்றார் ஸ்ருதி.

என் அப்பா தன் திரைப்படத்தில் நடிக்குமாறு கூறி அண்மையில் என்னை சந்தித்து பேசினார். ஆனால் என்னிடம் டேட்ஸ் இல்லை. என்ன செய்வது என்று ஸ்ருதி கூறினார். 

காதல் செய்ய நேரமே இல்லை. ஹாலிவுட் நடிகரான ரயன் கோஸ்லிங்கே வந்து என்னை வெளியே அழைத்துச் செல்ல கேட்டாலும் நான் என் இயக்குனர்களிடம் தான் கேட்டுவிட்டு செல்ல வேண்டும் என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X