2025 மே 19, திங்கட்கிழமை

விஜய், அஜீத்தை மிஞ்சிய சூர்யா!

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய திகதியில் ரஜினி, கமல் தவிர்த்து, சம்பளம் வாங்குவதில் முன்னணியில் உள்ள நடிகர் யார் தெரியுமா?. தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களின் அந்தஸ்தை நிர்ணயிப்பது வெற்றிகளும் நிர்ணயிக்கப்படும் சம்பளமும் மட்டும்தான்.

ஒரு திரைப்படம் ஹிட் ஆகிவிட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக்கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

ஏழாம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்து தோல்வியால் ஆட்டம் கண்ட சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கிவிட்டது சிங்கம் 2 வெற்றி. இதற்கு இணையான பெரிய வெற்றியை சூர்யாவின் வரிசையில் உள்ள வேறு எந்த நடிகரின் திரைப்படமும் பெறவில்லை.

தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் அஞ்சான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. இந்த திரைப்படத்தில் சூர்யாவின் தோற்றம் குறித்த ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 20 கோடிகளைத் தாண்டுகிறதாம். சூர்யாவின் திரைப்படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் சூர்யா கேட்டிருக்கிறார்.

தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். சூர்யாவின் திரைப்படங்களின் தெலுங்கு உரிமை குறைந்தது 20 கோடிக்குப் போகிறது. அப்படியானால் சூர்யாவின் சம்பளம் எவ்ளோன்னு சொல்லுங்க பார்ப்போம்...!



You May Also Like

  Comments - 0

  • sankaranarayanan.m Saturday, 09 August 2014 08:25 AM

    சூப்பர் சூர்யா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X