2025 மே 19, திங்கட்கிழமை

விமானத்தில் ஓர் விபரீதம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 16 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



150 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்படும் தனியார் விமானத்திலிருந்து 'நொன் ஸ்டொப்' திரைப்படத்தின் கதை ஆரம்பமாகிறது. இதில் பயணிகளின் ரகசிய பாதுகாவலராக பயணிகள் போல் நாயகன் நீசன் பயணிக்கிறார். இவருடன் மற்றறொரு காவலரும் செல்கிறார். 6 வயது சிறுமி இறந்த துக்கத்தில் பயணம் செல்கிறார் நீசன்.

இந்நிலையில் நீசனின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (மெசேஜ்) வருகிறது. இதில் விமானம் நல்ஷபடியாக போய் சேர வேண்டுமானால் என்னுடைய எக்கவுண்ட் நம்பருக்கு 150 மில்லியன் டொலர் பணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் 20 நிமிடத்திற்கு ஒருணிறை ஒவ்வொருவராக இறப்பார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த மெசேஜை யார் அனுப்பியது என்று அறிய அந்த நம்பருக்கு பதில் மெசேஜ் அனுப்புகிறார். சிறிது நேரம் இப்படியே உரையாடல் நடக்கிறது. நீசன் பதற்றமாக இருப்பதைக் கண்டு, இவருடன் வந்த மற்றறொரு காவலர் விசாரிக்க, நீசன் அவர் மீது தவறாக சந்தேகப்பட்டு விசாரிக்கிறார். இதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, அந்த காவலரை கொன்று விடுகிறார் நீசன்.

அதன்பிறகும் நீசன் செல்போனுக்கு மெசேஜ் வருகிறது. விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தான் தனக்கு மெசேஜ் அனுப்புகிறார் என்று அறிந்து கொண்டு விமானத்தில் அவரை தேடுகிறார்.

இதற்கிடையில் அடுத்த 20 நிமிடத்தில் விமானி மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் செல்போனை ஒரு பயணிடம் இருந்து கண்டு பிடிக்கிறார். பிறகு அந்த பயணியும் இறந்துவிடுகிறார்.

இறுதியில் விமானத்தில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடித்தாரா? பயணிகளை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் நீசன், தன்னுடைய அருமையான நடிப்பால் காட்சிகளுக்கு மிளிரூட்டுகிறார். குறிப்பாக மெசேஜை கண்டு பதற்றம் அடையும் காட்சிகள் அருமை. படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கூடுதல் பலம்.

விமானத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் அதை எடுத்த விதம் சபாஷ் போட வைக்கிறது. விமானத்தில் நடக்கும் கதையை உருவாக்கிய இயக்குனரை பாராட்டாம். மொத்தத்தில் 'நொன் ஸ்டாப்' நொன் ஸ்டாப் ஆக்ஷன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X