2025 மே 19, திங்கட்கிழமை

ஹீரோ இல்லை: அதிரடியில் இறங்கும் முருகதாஸ்

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே... ஹீரோக்களின் ஷோதான். தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என எல்லாமே ஹீரோக்களின் அதிரடி ஆக்ஷன் கதைகள்தான்.

ஆனால் முதல் முறையாக ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்த நாயகி சோனாக்ஷி சின்ஹா.

கத்தி படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை இந்தியில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதுபற்றி ட்விட்டரில் சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

'நான் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஹீரோயினை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும்' என்று கூறியிருக்கிறார்.

ஹாலிடே திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பற்றி சோனாக்ஷி அதிக ஆர்வத்துடன் பேசிய போது முருகதாஸ் சோனாக்ஷியின் திறமைகளைப் பற்றி அறிந்து இந்த வாய்ப்பை அளித்துள்ளாராம்.

படத்தைத் தயாரிப்பது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷனும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X