2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் கற்கும் எமி

George   / 2014 ஜூலை 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ஐ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் எமி ஜெக்சன், தமிழ் கற்று வருகின்றாராம்.

அண்மையில், ஷண்டனில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவொன்றில் பங்குபற்றிய எமி ஜெக்சன், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஐ திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ள எமி, ஷங்கர் மற்றும் விக்ரம் ஆகியோரின் முயற்சியினால் தலைசிறந்த திரைப்படமாக ஐ தயாராகி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் ஒருவருடன் பணியாற்றக் கிடைத்தது தனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

ஐ திரைப்படத்துக்கு பிறகு ஹிந்தி திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகக் குறிப்பிட்டுள்ள எமி ஜெக்சன், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் தமிழ்த் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு பாடல்: 100 ஆடைகள்

ஒளிப்பதிவாளரர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மாத்திரமே படப்பிடிப்புக்காக உள்ளன.

இதற்காக பட குழுவினர் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் கனடாவில் இப்பாடல் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் ஒரு பாடல் காட்சி சுவிட்சர்லாந்தில் எடுக்கப்படவுள்ளதாம். இதுவரை படம் எடுக்காத லொக்கேஷன்களில் இதனை எடுக்க இருக்கிறார்களாம். இந்த பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகள் அணிய இருக்கிறார்கள்.

இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு காட்சிக்கு ஒரு உடை அணிந்து ஆடுவார்களாம்.

இசைப்புயலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்


இசைத் துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கல்லூரியான பெர்க்லீ, எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைக் கல்லூரி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தக் கல்லூரி சார்பில் எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதையும் நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொஸ்டன் நகரில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவின்போது ஏ.ஆர்.ரகுமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது இசையமைப்பில் உருவான பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பெர்க்லீ இசைக்கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து நடத்தும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X