2025 மே 19, திங்கட்கிழமை

பூஜா ரகசிய திருமணம்?

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடவுள் பாதி மிருகம் பாதி என்ற புதிய திரைப்படத்தில் பூஜா கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அண்மையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பூஜா பேசியதாவது,

இத்திரைப்படத்தின் இயக்குநரான ராஜூவை 16 வருடங்களாகத் தெரியும். படிக்கும்போது இருவருக்கும் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. அது காதல் இல்லை. என்னிடம் அவர் பேச வந்தபோது, போடா என்று சொன்னதாக ஞாபகம்.

எனது அப்பா, படிக்கும் வயதில் ஃபோய் பிரெண்ட் அது இது என்று அலையாதே என்றார். ஒருநாள் ராஜ் எனக்கு போன் செய்து, படம் தயாரிக்கிறேன். நீ கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார். சரி என்று நடித்துள்ளேன்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு இரகசிய திருமணமும் நடக்கவில்லை. புதுமுகங்களையும், வித்தியாசமான கதையுள்ள படங்களையும் தமிழ் இரசிகர்கள்  எப்போதும் ஆதரிப்பார்கள். இந்தப் படத்தையும் வெற்றிபெறச் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X