2025 மே 19, திங்கட்கிழமை

ஓநாய் விக்ரம்...

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல ஹொலிவூட் திரைப்படமான ஹல்க்கின் தாக்கம் ஷங்கரின் ஐ திரைப்படத்தில் காணப்படுவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ திரைப்படம், எதிர்வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படத்துக்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். ஏற்கெனவே, இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய படத்தின் டீசர், பத்திரிக்கையாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக போட்டுக்காட்டப்பட்டது.

அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.

தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரன் குறித்து அறிவியல் பரிசோதனை செய்யும் கதைக்களம் தான் ஐ எனக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்கட்டு கொண்டவராக காட்சி தருகிறார் என தகவல்கள் வெளியாயின.

இத்திரைப்படத்திற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் கிடந்து உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் விழாக்களில் அவ்வப்போது தலைகாட்டினார்.

ஆனால், விக்ரமின் அந்த தோற்றத்தில் உள்ள காட்சிகள் இல்லாமல் அவர் ஒழுங்கற்ற வகையில், அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் காட்சி தரும் காட்சிகள் டீசரில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • ஜெயம் இராமச்சந்திரன் Wednesday, 03 September 2014 11:24 AM

    நாய் வேஷம் போட்டால் குரைத்துத் தானே ஆகவேண்டும்.

    Reply : 0       0

    muruganandam Thursday, 04 September 2014 11:57 AM

    CIvan vikaram will reach in the world very soon

    Reply : 0       0

    arun sri lanka Thursday, 04 September 2014 12:25 PM

    Super chiyan neethan adutha superstar

    Reply : 0       0

    v ignesh Friday, 10 October 2014 05:44 AM

    super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X