2025 மே 19, திங்கட்கிழமை

முன்கூட்டி வெளியாகும் கத்தி

George   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன், கத்தி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் லைகா நிறுவனம்.

போட்டியைச் சமாளிக்கவும், நல்ல திரையரங்குகளை கைப்பற்றவும்; கத்தி படத்தை முன்கூட்டி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் - சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படமான கத்தியின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன  இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு பணிகளைச் செய்து வந்தனர்.

ஆனால் தீபாவளிக்கு பூஜை மற்றும் பூலோகம் படங்கள் வருவது உறுதியாகியுள்ளது. எனவே திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. விஷாலின் பூஜை படத்துக்கு 350 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன் பூலோகம் படத்தை வாங்கி வெளியிடுவோருக்குதான் படத்தைத் தருவேன் நிபந்தனை விதித்துள்ளதால், நல்ல அரங்குகள் அனைத்தும் இந்த இரு படங்களுக்கும் போகும் நிலை உள்ளது.

எனவே தீபாவளிக்கு முன்கூட்டியே ஒக்டோபர் 17ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கத்தி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அப்படி முன்கூட்டி ரிலீஸாகும் பட்சத்தில் படத்திற்கு மொத்தமாக பத்து நாட்கள் வசூல் கிடைக்கும். நான்கு நாட்களுக்கு போட்டியின்றி படத்தை திரையிடலாம் என தயாரிப்பு தரப்பு நம்புகின்றதாம்.

You May Also Like

  Comments - 0

  • ansari Monday, 13 October 2014 11:30 AM

    ஏன் இப்படி பொய்

    Reply : 0       0

    kajamukan Wednesday, 15 October 2014 03:35 PM

    super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X