Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகபெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஐ திரைப்படத்துக்கு யூ சான்று பெறுவதற்கு படக்குழுவினர் உறுதியாக உள்ளனராம். இதற்காக பல்வேறு முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
;அண்மையில் 'ஐ' திரைப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 'யூஏ' சான்று அளித்தனர்.
'யூ' சான்று பெற்றால்தான் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும். என்பதால் 'யூ' சான்று அளிக்கும்படி வற்புறுத்தியும், தணிக்கை குழுவினர் ஏற்கவில்லை. ஆனால், படக்குழுவினரோ 'யூ' சான்று பெறுவதில் உறுதியாக உள்ளனர். இதனையடுத்து, இத்திரைப்படத்தை மேல் முறையீட்டு கமிட்டிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
'ஐ' திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஹொலிவூட் தரத்தில் இந்த திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாயகியாக எமி ஜக்சன் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார்.
ஐ திரைப்படத்தின் டிரைய்லர், கடந்தவாரம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்துக்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .