2025 மே 19, திங்கட்கிழமை

விஜயின் 'புலி'

George   / 2015 ஜனவரி 04 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தி' திரைப்படத்துக்கு பின்னர் விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில்;, இரசிகர்களும்  இந்த திரைப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இச்த திரைப்டத்துக்கு முதலில் 'மாரீசன்', 'கருடா', 'போர்வாள்' ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இதனையடுத்து நேற்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

 அதன்படி, திரைப்படத்துக்கு 'புலி' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு இரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும், 'நான் ஈ' புகழ் சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சிபுதமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தை பெரிய பொருட் செலவில்; தயாரித்து வருகின்றனர். கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்த திரைப்படம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X