2025 மே 19, திங்கட்கிழமை

லிப் டு லிப்பால் தொற்று நோய் ஏற்படும்: ஹன்சிகா

Menaka Mookandi   / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த காலத்தில் ஹீரோ- ஹீரோயின் முத்தக்காட்சி வந்தால் மரத்துக்கு பின்னால் சென்றுவிடுவார்கள். குறிப்பால் உணர்த்தும் காட்சியாக மட்டுமே இருந்தது. இப்போது லிப் டு லிப் என்பது ஹொலிவூட் திரைப்படங்களுக்கு இணையாக கோலிவூட் திரைப்படங்களிலும் படமாக்கப்படுகிறது.

அதில் நடிக்க பல நடிகைகள் தயாராக இருக்கின்றனர். ஒன்றிரண்டு ஹீரோயின்கள் லிப் டு லிப் காட்சிகளில் நடிப்பதை விரும்புவதில்லை. ஹோம்லியாக மட்டுமே நடிப்போம் என்கிறார்கள். முத்தக்காட்சிக்கு ஹன்சிகாவும் எதிர்ப்பாளர்தான். ஆனால் அதற்கு காரணம்தான் வேறு சொல்கிறார்.

லிப் டு லிப் முத்த காட்சி என்பது எல்லா மொழிப்படங்களிலும் சகஜமாகிவிட்டது. அதுபோன்ற காட்சிகளில் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டால், 'லிப் டு லிப் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது பாக்டீரியாவில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உடல்பாதிப்பு ஏற்படும் எனவே அதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்' என்கிறார் ஹன்சிகா.

ஒரு சில டைரக்டர்களிடம் இதுபோல் அவர் கூறியும் இருக்கிறாராம். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியும் அடைந்தார்களாம்.அதேபோல் டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும்போது, 'ஏற்கனவே நடித்த ஒரு சில படங்களில் முத்தக்காட்சியில் நடித்ததற்கு காரணம், அந்த ஸ்கிரிப்ட்டுக்கு அது தேவையாக இருந்ததால்தான். இனிமேல் முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X