2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

உள்ளாடையில் சமந்தா

George   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சமந்தா, உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக அவருக்கு 6 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

அவர் ஏற்கெனவே நகை விளம்பரங்களில் நடிப்பதுடன் குளிர்பான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 

இதற்காக கணிசமான தொகையை சம்பளமாக பெற்றுள்ளார். இதையடுத்து தற்போது பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம், சமந்தாவை தங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இரண்டு வருடங்களுக்கு சமந்தாவிடம் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் இந்த கால கட்டத்தில் அந்த நிறுவனம் தயாரிக்கும் உள்ளாடைகளை, சமந்தா - விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாம்.

இதற்காகத்தான் சமந்தாவுக்கு 6 கோடி இந்திய ரூபாய் வழங்கப்படுகின்றதாம். 

சமந்தா, தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்படிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்து வேல்ராஜ் இயக்கும் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளதுடன் தெலுங்கு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .