2025 மே 19, திங்கட்கிழமை

தனுஷ் -சிவகார்த்திகேயன் மோதல்

George   / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 திரைப்படத்தின்மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகுக்கு அழைத்துவந்தவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமல்லாமல் தனது சொந்த நிறுவனத்தில் எதிர் நீச்சல் என்ற திரைப்படத்தையும் தயாரித்து சிவகார்த்திகேயனை முன்னணி இடத்துக்கும்; கொண்டுவந்தார். 

ஆனால் அண்மைகாலமாக தனுஷ்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில்  முறுகல் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் காக்கிச் சட்டை திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் கூறும்போது, எனக்கும் தனுஷ்க்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் எப்போதும் நண்பர்கள் என்றார். 

மேலும், அவருக்கு சில வேலை பழு காரணமாகவே இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், நேற்று முன்தினம் சென்னையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ், சிவ்கார்த்திகேயன் வருவதை அறிவித்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார்.  இச்சம்பவம் அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதாகவே அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • kajolprasath@yahoo.com Friday, 13 March 2015 06:08 AM

    hi

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X