Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில மாதங்களாக திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு அடிக்கடி உடலநலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சில நாட்கள் ஒய்வெடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார்.
அவரது தாயார் மற்றும் ஹன்சிகாவுக்கு நெருக்கமான தோழிகள் அவருடன் செல்கிறார்கள். ஒரு வாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ஐந்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அவர் நடித்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் ஹன்சிகாவின் நிலையை புரிந்து கொண்டு நாட்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதேவேளை, தனது பெயரில் இணையத்தளத்தில் வெளியான ஆபாச வீடியோவால் நடிகை ஹன்சிகா வருத்தத்தில் உள்ளாராம்.
ஹன்சிகா, குளியலறையில் இந்த படத்தை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இணையம் மற்றும் வாட்ஸ்அப்பில் சிலர் வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்லவென்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஹன்சிகா வீடியோ என்ற பெயரிலேயே இவை பரவி வருகின்றன.
இதுகுறித்து சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளிப்பது குறித்து ஹன்சிகா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த ஆபாச படவிவகாரம் ஹன்சிகாவுக்கு மனவருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக அவர் ஓய்வு எடுத்து இருக்கிறார். தனது தத்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார்.
ஹன்சிகா கைவசம் ஆறு திரைப்படங்கள் உள்ளன. இவற்றில் விஜய் ஜோடியாக நடிக்கும் 'புலி' திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் நான்கு தினங்களுக்கு முன் நடித்து முடித்தார்.
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஜெயம்ரவி ஜோடியாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது. சிம்புவுடன் நடிக்கும் வாலு திரைப்படத்தையும் முடித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago