Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஜேந்திரா திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த புளோராவை ஞாபகம் இருக்கிறதா? தெலுங்கில் முன்னணி நடிகையான புளோராவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம்.
அவர், அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஒப் கோட் என்ற திரைப்படத்தில் மனித வெடி குண்டாக நடித்து இருந்தார். பெண் தீவிரவாதியை போல் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த புளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்தனர்.
தற்போது அவரது அலைபேசிக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தீர்த்து கட்டி விடுவோம் என்றும் குறும் செய்தி அனுப்புகிறார்கள். இதனால் புளோரா பயந்து போயுள்ளாராம்.
மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றும் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பொலிஸாரிடம் அவர் மனு அளித்துள்ளாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago