George / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

'அலைபாயுதே' பாணியிலான ரொமான்டிக் திரைப்படமாக, மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவாகியுள்ள ஓ காதல் கண்மணி' திரைப்பட பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டன.
'கடல்' திரைப்படத்துக்கு பின்னர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'ஓ காதல் கண்மணி' . இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாகவும் நித்யாமேனன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெள்ளிக்கிழமை(03) நள்ளிரவு வெளியிடப்பட்டன.
திரைப்படத்தின் பாடல்கள், ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியாகும் என்று திரைப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
10 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
18 minute ago