George / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
60000.jpg)
காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என எம்.ஜி.ஆர் பாடியதுபோல, கலிபோர்னியாவுக்கு காற்று வாங்கப்போன மம்தா மோகன்தாஸ், கவிதையையும் வாங்கியிருக்கிறார்.
கலிபோர்னியா கடற்கரைக்கு சுற்றுலா சென்ற அவர், அங்கேயிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கடலை ரசித்துக்கொண்டிருக்கையில், 'காற்று என் கூந்தலில் உரச, சூரியன் என் முகத்தில் முத்தமிட' என கவிதையான வரிகள் தானாக ஊற்றெடுத்திருக்கிறது. அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவுசெய்துள்ளார்.
சரி.. கலிபோர்னியாவுக்கு எதற்காக போனார் மம்தா..? நாள்முழுவதும்; நடிப்பு, பணம் என அலட்டிக்கொள்ளாதவர்தான் மம்தா. அதனால் மம்தாவின் கைவசம் இருக்கும் நிறைய நாட்கள் ஓய்வுக்காக அவரை அழைத்தன.
தற்போது திலீப்புடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாட்கள் இருப்பதால் அதற்குள் கொஞ்சம் புத்துணர்ச்சியை அதிகரித்துக்கொண்டு வந்துவிடலாம் என்பதற்காகத்தான் அம்மணியின் இந்த கலிபோர்னியா சுற்றுலாவாம்.
600.jpg)
9 minute ago
12 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
17 minute ago