Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படபிடிப்பு, நாளை திங்கட்கிழமை(20) தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள், (தல) அஜீத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அதாவது, 'மங்காத்தா' திரைப்படம் முதல் 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரை அஜீத் தனது தலைமுடியை சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் வைத்து நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இந்த ஸ்டைலை வெகுவாக ரசித்த ரசிகர்கள் தற்போது, இந்த ஸ்டைலில் இருந்து அஜீத் மாறவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதனால், அஜீத் தற்போது நடிக்கவிருக்கும் சிறுத்தை சிவா திரைப்படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்து மாறி, நடிக்கவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள். இதை அஜீத் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அஜீத்துக்கு தங்கையாக நடிகை லட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
ஏ.எம்.ரத்னத்தின் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
3 hours ago