Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான ஒரே இரவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா ஓ.கே. சொல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
'உத்தமவில்லன்', 'பாபநாசம்', 'விஸ்வரூபம்-2′ என வரிசையாக மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்குள் கமலின் புதிய திரைப்படம் குறித்த செய்தி வெளியாக ஆரம்பித்துள்ளது.
ஆக்ஷன், த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார்.
கமலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் இதனை தயாரிக்கவிருக்கிறார். மேலும் திரைப்படத்திற்கு 'ஒரே இரவு' என தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.
இதில் ஹீரோயினாக நடிப்பது குறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம். த்ரிஷா ஏற்கெனவே கமல்ஹாசனுக்கு ஜோடியாக மன்மதன் அம்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனால் அவர் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள். திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு ஸ்டைலிஷான கேரக்டர் என்று கூறப்படுகிறது.
விரைவில் இத்திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, ஒரே இரவுக்கு கமலிடம் ஓ.கே சொல்வாரா த்ரிஷா?
19 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
1 hours ago