2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரியாமணிக்கு விரைவில் டும் டும்...

George   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமணம் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

மாப்பிள்ளை சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இந்தியரா? வெளிநாட்டை சேர்ந்தவரா? என்பதை இப்போது கூற முடியாது. எனது திருமணத்தை முறைப்படி தெரிவிப்பேன் எனவும் பிரியாமணி கூறியுள்ளார்.

இரகசிய கமரா பொருத்தி நடிகைகள் மட்டுமல்ல எந்த பெண்களையும் படம் எடுத்து வெளியிடுவது தவறான செயல். அதில் அவர்களுக்கு என்னதான் மகிழ்ச்சி கிடைக்க போகிறதோ தெரியவில்லை? அவர்கள் அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து பார்த்தது உண்டா? 

எனக்கு அதுபோன்ற சம்பவம் இதுவரை நடைபெறவில்லை. யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது என பிரியாமணி குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் தனியார் நிகழ்வுவொன்றில் கலந்துகொள்ள வந்தபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .