Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருத்து வேறுபாடு காரணமாக நடிகை திரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் திருமணம் முறிவடைந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிறகு இவர்களுடைய உறவு முறிந்து, இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.
தற்போது, திரிஷா- வருண்மணியன் ஆகியோருக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இதனாலேயே வருண்மணியன் தயாரிக்கும் திரைப்படத்திலிருந்து திரிஷா விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முன்பெல்லாம் விருந்து நிகழ்ச்சிகளில் வருண்மணியனுடன் ஜோடியாக கலந்துகொள்ளும் திரிஷா இப்போது தனியாகவே வருகிறாராம்.
சமீபத்தில் வருண்மணியனின் குடும்ப நிகழ்ச்சியொன்று நடந்துள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் திரிஷா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் பிரிவுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகளில் இருவருக்கும் பொதுவான நண்பர்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
3 hours ago