2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாண சர்ச்சையில் ராதிகா

George   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடித்த குறும்படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ராதிகா ஆப்தே எடுத்த செல்பி புகைப்படங்கள், ஏற்கெனவே வாட்ஸ் ஆப்பில் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், அந்த நிர்வாண படங்களில் தோன்றுவது நான் அல்ல. என்னைப் போல் வேறொருவர் என்று ராதிகா ஆப்தே அறிக்கை விட்டார்.

ஆனால், அந்த சர்ச்சை அடங்குவதற்குள், அவரே ஹொலிவூட் திரைப்படத்தில் தான் நிர்வாணமாக நடிக்கப்போவதாக அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் இவரை பற்றிய சர்ச்சையான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொலிவூட் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யாப் இயக்கிய குறும்படம் ஒன்றில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் ராதிகா ஆப்தே .

20 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தில் ராதிகா ஆப்தே தனது மர்ம உறுப்பை இன்னொருவருக்கு காண்பிப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

குறும்படம் இன்னும் வெளியாகாத நிலையில், இவர் நடித்த அந்த காட்சி மட்டும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது.

இதுகுறித்து அறிந்ததும் திரைப்படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மும்பை பொலிஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் திரைப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

மேலும், இந்த காட்சியில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே மௌனம் காத்து வருகிறார். இந்த காட்சியை வெளியிட்டவரை கண்டுபிடிக்கும்வரை தான் எந்த பதிலும் கூறப்போவதில்லை என்றும் கூறியுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0

  • Arasu Thursday, 30 April 2015 08:29 AM

    Plz paavamppa vidunga

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X