2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் தமிழில் தடம்பதிக்கும் பூஜா குமார்

George   / 2015 மே 04 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆள விட்டா போதும் சாமி என்று அமெரிக்காவில் செட்டிலான நடிகை பூஜா குமார் மீண்டும் தமிழில் திரையுலகில் தடம்பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

கேயார் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் காதல் ரோஜாவே. முன்னாள் நடிகை ஷீலாவின் மகனான விஷ்ணு ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார்.

காதல் ரோஜாவே திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. எனவே, பூஜா குமாருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. வெறுத்துப்போன பூஜாகுமார் சினிமாவுக்கு குட்பை சொல்லி, அமெரிக்காவில் செட்டிலானார்.

ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்த பூஜாகுமாரை நடிகை கௌதமி மூலம் கண்டுபிடித்த கமல், விஸ்வரூபம் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வைத்தார்.

இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பதற்கு முன், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இறைவி திரைப்படத்தை ஒப்புக்கொண்டு விட்டாராம். இறைவியில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக் பூஜா குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X