2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

படபிடிப்பில் கட்டி புரண்ட நடிகைகள்

Administrator   / 2015 மே 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகைகள் இனியாவும், நிகிஷா படேலும் படப்பிடிப்பில் குடுமிபிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜே.கே.எஸ்.இயக்கும் கரையோரம் என்ற திரைப்படத்தில் இருவரும், இணைந்து நடிக்கின்றனர். இதில் சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இனியாவுக்கும் நிகிஷாவுக்கும் யார் பெரிய நடிகை என்பதில் பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்கநரை நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்ட இருவரது சண்டை திடீரென எல்லை மீறியதுடன் ஒருவரையொருவர் திட்டியுள்ளனர்.

அத்துடன், திடீரென குடுமியை பிடித்து சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் திரைப்படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கரையோரம் திரைப்படத்தில் நிகிஷாதான் நாயகி. இனியா வில்லியாக வருகிறார். இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் மோதல் ஏற்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர் என, இருவர் சண்டையை நேரில் பார்த்த திரைப்படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X