2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அதிர்ச்சி தரும் சமந்தா...

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமர்ஷியல் திரைப்படங்களில் நடிக்கவே பெரும்பாலான ஹீரோயின்கள் ஆசைப்படுகின்றனர். இதற்கு சமந்தாவும் விதிவிலக்கல்ல.

விருது திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, 'விருது திரைப்படங்கள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதுபோன்ற திரைப்படங்களில் நடி என்று என மனது சொன்னாலும் சூழல்நிலை ஏற்க மறுக்கிறது' என்றார்.

'விருதுகள் வாங்கி குவிப்பது சந்தோஷம்தான். ஆனால், அது எதற்கு உதவுகிறது என்றால் என்னிடம் பதில் இல்லை. பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திரைப்படங்களைத் தான் இரசிகர்கள் பார்க்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் அந்த திரைப்படத்தை ஒதுக்கிவிடுகிறார்கள்.

அதுபோன்ற திரைப்படங்களால் எந்த பயனும் கிடையாது. இதனால் தயாரிப்பாளர்கள் நட்டம் அடைகின்றனர். வர்த்தக ரீதியிலான திரைப்படங்கள் மட்டும்தான் எல்லோரையும் திருப்திபடுத்தும். அதனால்தான் நான் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாவற்றையும் கமர்ஷியல் கதை அம்சமுள்ள படங்களாகவே தேர்வு செய்கிறேன்' என்றார்.


  Comments - 0

  • Rajkumar Friday, 12 June 2015 11:32 AM

    Its True

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .