2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நடிகை ஹேம மாலினியின் கார் விபத்து: குழந்தை பலி

George   / 2015 ஜூலை 03 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை ஹேம மாலினி சென்ற கார் ராஜஸ்தானில் நேற்று வியாழக்கிழமை(02) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் ஹேமமாலினியின் கார், எதிரே வந்த மற்றுமொரு காரில் மோதியதையடுத்து அதில் பயணித்த குழந்தை பலியாகியிருப்பதாகவும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ப்பூரில் உள்ள வைத்தியசாலைக்கு அவர் தனியாகவே வந்ததாக வைத்தியசாலை ஊழியர் தெரிவித்துள்ளார். 

இந்த விபத்தில் ஹேம மாலினி காயமடைந்த நிலையில் அவருக்கு மூக்கில் தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X