2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் 'குஷி' ஜோடி

George   / 2015 ஜூலை 12 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நீண்ட காலத்துக்கு பின்னர் 'குஷி' கூட்டணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படம் நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.
காதல் மற்றும் குடும்ப திரைப்படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த விஜய்க்கு, குஷி திரைப்படம், கமர்ஷியல் ரொமான்டிக் திரைப்படமாக அமைந்தது.

புலி திரைப்படம், விரைவில் வெளியாக தயாராகியுள்ள நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜயின் 59ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விஜயை சந்தித்துப்பேசிய எஸ்.ஜே.சூர்யா, திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார். அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட விரைவில் நாம் இணைந்து திரைப்படம் பண்ணுவோம் என்று சூர்யாவிடம் விஜய் கூறியுள்ளாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X