Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூலை 08 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட் வீழாமல் கட்டிக்காத்து வரும் காஜல் அகர்வால் தற்போது தனது போய் பிரண்டுகளை தன்பக்கம் நெருங்க விடுவதே இல்லையாம்.
காஜலுடன் நெருக்கமாக பழகும் நண்பர்கள் அவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வந்து விட்டால் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களுக்கும் வந்து நட்பு வளர்க்கிறார்களாம்.
ஏற்கெனவே, ஜொலி பார்ட்டியான காஜலும் தான் இருப்பது படப்பிடிப்பு தளம் என்பதைகூட மறந்து நண்பர்களுடன் கலாட்டாவில் ஈடுபட்டு விடுகிறாராம் இது துப்பாக்கி, ஜில்லா திரைப்படங்களில் இருந்து சற்று அதிகமாகிவிட்டதாம்.
ஆனால் இந்த அரட்டையை சிலர் பொறுத்துக்கொண்டபோதும் அண்மையில் ஒரு படப்பிடிப்பு தளத்துக்கும் காஜலின் மும்பை ப்ரண்ட்ஸ் வந்து அரட்டையில் ஈடுபட, அந்த இயக்குநர் செம காண்டாகி விட்டாராம்.
அதோடு இந்த மாதிரி நண்பர்களுடன் லூட்டி அடிப்பதையெல்லாம் வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். இது படப்பிடிப்பு நடக்கிற இடம் என்று காஜலிடம் கடிந்து கொண்டாராம்.
விளைவு, இப்போது எந்த போய் நண்பர்களையும் படப்பிடிப்பு தளங்கள் பக்கம் நெருங்க விடுவதில்லையாம் காஜல். இருப்பினும், சிலர் அவ்வப்போது அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து டென்சன் செய்து வருவது தொடர்ந்து வருகிறதாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago