George / 2015 ஜூலை 13 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாயா திரைப்படத்தில் 8 மாத கைக்குழந்தைக்காக போராடும் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா என்றாலே கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், அவர் நடித்துள்ள மாயா திரைப்படத்தின் கதை என்னவென்று கிசுகிசுக்கள் பரவ முடியாதபடி, கதை வெளியே தெரியாமலேயே படப்பிடிப்பில் நடிகர்கள் எல்லோரும் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டான பகுதியை மட்டும் தனித்தனியாக எடுத்துள்ளார் இயக்குநர். சேர்ந்து நடிக்கும் பகுதி மிகவும் குறைவு. அப்படி நடிக்கும் போதும் இயக்குநர் சொன்னதையே நடிகர்கள் எல்லோரும் செய்துள்ளனர்.
ஒருவருக்கும் கதை புரியவில்லையாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் பராமரித்து இரகசியம் காத்துள்ளாராம் இயக்குநர் அஸ்வின் சரவணன். மாயா திரைப்படத்தில் நடித்தவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டாலும் கதையைப் புரிந்துகொள்ள முடியவில்லையாம். ஏனெனில், இது வழக்கமான பேய்க்கதையாக இருக்காதாம்.
இந்தப் திரைப்படத்தில் நயன்தாரா எட்டுமாத கைக்குழந்தைக்குத் தாயாக நடித்துள்ளாராம். எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் அவரது போராட்டம், சீரியஸான சென்டிமெண்டாக இருக்கும் என்பது மட்டும்தான் இதுவரை வெளியான தகவல்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago