2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாவனா – மியாவின் 'ஹலோ நமஸ்தே'

George   / 2015 ஜூலை 13 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மே மாதம் வெளியான இவிடே திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் அந்த திரைப்படத்தில் தனது நடிப்பு பேசப்பட்டதில் பாவனாவுக்கு மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சியோடு தற்போது அவர் மலையாளத்தில் ஹலோ நமஸ்தே  என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார்.

அதில் பாவனாவுடன் இணைந்து இன்னொரு கதாநாயகியாக நடிகை மியா நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஜெயன் கே.நாயர் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் பாவனா பேக்கரி நடத்துபவராகவும், மியா ஒரு கம்பெனியில் ஹெச்.ஆர் ஆகவும் கதாபாத்திரம் ஏற்றியிருக்கிறார்கள்.

திரைப்படத்தில் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையேயான நட்பை பற்றி கொமெடியான முறையில் சொல்கிறார்களாம். பாவனா நடித்து சூப்பர்ஹிட்டான எங்ரி பேபிஸ் இன் லவ் திரைப்படத்துக்கு கதை எழுதிய கிருஷ்ணா பூஜப்புரா தான் இந்த திரைப்படத்துக்கும் கதை எழுதுகிறார் என்பது கூடுதல் தகவல். 

பிரேமம் திரைப்படத்தில் அசத்திய வினய் போர்ட், ஒரு வடக்கன் செல்பி புகழ் அஜூ வர்கீஸ் ஆகிய இருவரும் இருப்பதால் சிரித்து சிரித்து வயிற்று வலிக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X