2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கோலிவூட்டில் சேரிப் பெண்

George   / 2015 ஜூலை 13 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கவர்ச்சிகரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள மனீஷா யாதவ், ஒரு குப்பைக் கதை என்ற திரைப்படத்தில் சேரிப் பெண்ணாக நடிக்கவுள்ளார்.

இந்த வேடத்துக்கு திரைப்படத்தின் இயக்குநர் நடிகை தேடியபோது, தானே வலிய சென்று அந்த வேடத்தை கேட்டு வாங்கியிருக்கிறார்; மனீஷா.

முதல் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவர், அதையடுத்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என சில திரைப்படங்களில் நடித்தார். 

வேகமாக வளர்ந்த அவர், சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் திரைப்படத்துக்கு ஒப்பந்தமாகி, பின்னர் வெளியேறியதோடு இயக்குநரைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டதால் மனீஷாவை தமிழ் சினிமா இயக்குநர்கள் ஓரங்கட்டத் தொடங்கினர்.

இருப்பினும், பின்னர் சிலரை தேடிச்சென்று சமாதானம் செய்து த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கவர்ச்சிகரமான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் மனீஷா.

இந்த திரைப்படத்துக்கு பிறகு கோலிவூட்டில் அழுமாக கால் ஊன்றிவிட வேண்டும் என்று சேரிப் பெண்களோடு கலந்து பழகி, இயல்பான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் மனீஷாயாதவ்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .